states

img

விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து  

மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் விமானம் இன்று காலை விழுந்து விபத்துக்குள்ளானது.  

மத்திய பிரதேசம் – பிந்த் பகுதியில் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.  

இதுகுறித்து இந்திய விமானப்படை டுவிட்டரில் கூறப்பட்டிருப்பதாவது, இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 என்ற விமானம் இன்று காலை பயிற்சியின்போது தொழில்நுட்ப கோளாறால் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பினார் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டள்ளது என தெரிவித்துள்ளது.     

;